News September 26, 2025
தீபாவளியை கொண்டாட 12,000 சிறப்பு ரயில்கள்

தீபாவளி மற்றும் சாத் பண்டிகையையொட்டி அக்டோபர் மாத்தில் 12,000 சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயன்பெறுவார்கள் என தெரிவித்த அவர், சிறப்பு ரயில்கள் அக்டோபர் 1 முதல் 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். தேவையின் அடிப்படையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 26, 2025
ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு.. இதுவே முதல்முறை

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி ₹3 அதிகரித்து ₹153-க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,53,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 9 நாள்களில் மட்டும் சுமார் ₹11,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
News September 26, 2025
தேர்வாளர்களிடம் தான் கேட்கணும்: கருண் நாயர்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காதது குறித்து தேர்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும் என கருண் நாயர் கூறினார். வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்ததாக குறிப்பிட்ட அவர், ENG தொடரில் கணிசமான பங்களிப்பை அளித்திருந்தாலும், அணி தேர்வுக்கு அதுமட்டுமே காரணமாகாது எனவும் சுட்டிக்காட்டினார். கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கி இருக்கணும் என நினைக்கிறீங்களா?
News September 26, 2025
அக்.12-ல் பாஜக யாத்திரை தொடக்கம்

2026 தேர்தலில் 40 MLA-க்களை பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அக்.12-ல் மதுரையிலிருந்து பாஜக யாத்திரை தொடங்குவதாக நயினார் அறிவித்துள்ளார். இதனை JP நட்டா தொடங்கி வைக்கவுள்ளதாகவும், இதன்மூலம் மாவட்டந்தோறும் மக்களை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அதேநேரம், அக்.1 முதல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை நயினார் துவங்குகிறார்.