News September 26, 2025

சோனம் வாங்சுக் அமைப்பின் உரிமம் ரத்து

image

லடாக் கலவரத்துக்கு சமூக ஆர்வலர் <<17821134>>சோனம் வாங்கத்தே காரணம் <<>>என தெரிவித்திருந்த மத்திய அரசு, அவரது அமைப்பின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் நிதி ரத்தாகும். ஸ்வீடன் நாட்டிலிருந்து சோனம் வாங்கத் அமைப்புக்கு பெறப்பட்ட நிதி தேச நலனுக்கு எதிரானது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிதி பரிமாற்றங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Similar News

News September 26, 2025

தி.மலை: டிப்ளமோ போதும், இந்தியன் ஆயிலில் வேலை!

image

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் டிப்ளமோ/பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும்.(SHARE)

News September 26, 2025

BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்..

image

சரியாக தேர்தல் பணி செய்யாத, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முன்னெடுக்காத DMK மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலின் கடுமையாக எச்சரித்திருந்தார். இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து EX MLA நா.கார்த்திக் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் துரை.செந்தமிழ் செல்வன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தீர்மானக் குழு செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 26, 2025

ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு.. இதுவே முதல்முறை

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1 கிராம் வெள்ளி ₹3 அதிகரித்து ₹153-க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,53,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 9 நாள்களில் மட்டும் சுமார் ₹11,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!