News September 26, 2025

ஜாக் மாவின் பொன்மொழிகள்

image

✪ கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம் ✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு ✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியசமானவராக இருக்க வேண்டும் ✪ யோசனைகள் எதுவென்பது முக்கியமல்ல; அவற்றை செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம் ✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.

Similar News

News September 26, 2025

BREAKING: திமுகவில் இணைந்தவுடன் முக்கிய பதவி

image

அதிமுகவிலிருந்து விலகியிருந்த மருது அழகுராஜ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தித் தொடர்பாளர் துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பேச்சாளராகவும், ‘நமது எம்ஜிஆர்’ அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இவர் இருந்தார். ஜெ.,வின் அரசியல் உரைகளை எழுதிய அனுபவமுடைய இவர், இனி திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பார்.

News September 26, 2025

மூலிகை: வெட்டி வேரின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➥நாவறட்சி, தாகம் & வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்த வெட்டி வேர் உதவும் ➥நீண்ட நாள்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது வெட்டிவேர் எண்ணெயை தடவினால், அவை மறையும் ➥வெட்டிவேரை ஊறவைத்து, அரைத்து தண்ணீரில் கலந்து குளித்தால், உடல் அரிப்பு குறையும் ➥காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் போட்டு கொதிக்கவைத்து பருகலாம். SHARE.

News September 26, 2025

போட்டியில் தான் எங்கள் கவனம்: பாக்., கோச்

image

ஆசிய கோப்பையில் IND vs PAK போட்டியின்போது, பாக்., வீரர்களான ராஃப், ஃபர்ஹான் சர்ச்சைக்குரிய சைகைகளை வெளிப்படுத்தினர். இது பேசுபொருளான நிலையில், பாக்., கோச் மைக் ஹெசன் தனது கருத்தை முன்வைத்துள்ளார். மைதானத்துக்கு வெளியே நடப்பவை பற்றி அவா்களது சைகை இருந்தாலும், போட்டியிலேயே தங்களது முழு கவனமும் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்திய அணியை எதிர்கொள்ள பாக்., தகுதியாகவே உள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!