News September 26, 2025
திருப்பதி கூட்டத்தை கட்டுப்படுத்த AI தொழில்நுட்பம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க AI தொழில்நுட்பத்தை தேவஸ்தானம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தரிசன வரிசையில் சந்தேகத்துக்குரிய நபர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் முடியும். மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை உடனுக்குடன் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விரைவான தரிசன ஏற்பாட்டுக்கு இது வழிவகுக்கும்.
Similar News
News September 26, 2025
கரூரை டார்கெட் செய்யும் அரசியல் தலைவர்கள்

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருந்தாலும் பரப்புரை இப்போதே சூடுபிடித்துள்ளது. இப்போதைக்கு தமிழக அரசியல் தலைவர்களின் கவனம் முழுக்க கரூரை சுற்றி தான் உள்ளது. ஏனென்றால் இன்று EPS பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், நாளை விஜய்யும், நாளை மறுநாள் அன்புமணியும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கரூரில் நடைபெற்றது.
News September 26, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான சீர்காழி நகர்மன்ற செயலாலர் ஜெ.பாலகிருஷ்ணன், CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது தலைமையில், சீர்காழி நகர துணை செயலாளர் பரணிதரன், சீர்காழி நகர்மன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வனும் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தை போல டெல்டாவையும் திமுக குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.
News September 26, 2025
சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் விதிக்கப்படுமா?

ஆசியக் கோப்பை லீக் சுற்றில், பாகிஸ்தானை வீழ்த்திய பின், அரசியல் தொடர்பான கருத்துகளை சூர்யகுமார் தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ICC-யிடம் புகார் அளித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் நேற்று சூர்யாவிடம் விசாரணை நடத்தினார். இதில் சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் அல்லது போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.