News September 26, 2025
அன்று கட்டை விரல், இன்று NEP: தியாகராஜன் குமாரராஜா

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதை தடுத்துக் கொண்டே இருந்தார்கள் என்று ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்தார். முன்பு, ஏகலைவனிடம் கட்டை விரலை காணிக்கையாக கேட்டதை போல, கற்றவை எல்லாம் மறந்து போக வேண்டும் என கர்ணனுக்கு சாபம் கொடுத்தது போல, இன்று புதிய கல்விக் கொள்கை (NEP) வந்துள்ளதாகவும் கூறினார்.
Similar News
News September 26, 2025
தலைவருக்கான பண்பு EPSயிடம் இல்லை: ஆ.ராசா

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிச்சைக்காரன் என்றும், ஒட்டுப்போட்ட சட்டை போட்டவர் எனவும் EPS பேசியது அநாகரிகத்தின் உச்சம் என ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் EPS-க்கு இல்லை என்றும் விமர்சித்துள்ளார். அமித்ஷாவை பார்த்துவிட்டு முகத்தை மூடியபடியே வந்தவர் எல்லாம் பிச்சைக்காரன் எனப் பேசுவது சரியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 26, 2025
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் லிஸ்ட் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் சொத்துப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள நடிகைகளை யார் யார் என்று பார்க்கலாம். அந்த வகையில் (₹220 – ₹250 கோடி ) சொத்துடன் நயந்தாரா முதல் இடத்தில் உள்ளார். 2-ம் இடத்தில் தமன்னா(₹120 – ₹150 கோடி ), 3-ம் இடத்தில் சமந்தா (₹90 – ₹110 கோடி), 4-ம் இடத்தில் த்ரிஷா (₹85 கோடி), 5- இடத்தில் ரஷ்மிகா மந்தனா (₹60 – ₹70) ஆகியோர் உள்ளனர்.
News September 26, 2025
இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா

வரும் 30-ம் தேதி மகளிர் ODI கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து 340 ரன்களை குவித்தது. கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட்(120) சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடி இந்திய அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதனால் 187 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது.