News September 25, 2025
ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம்… காரணம் இதுதான்

ஆண்களை விட பெண்களுக்கு சராசரி ஆயுள் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. சராசரியாக பெண்கள் 75.6 ஆண்டுகளும், ஆண்கள் 70.8 ஆண்டுகளும் வாழ்கிறார்கள் என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த 5 வயது இடைவெளிக்கு என்ன காரணம் என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும். மேல் உள்ள புகைப்படங்களில் அதற்கான விடை இருக்கிறது.
Similar News
News September 26, 2025
உங்களுக்கு சளி, இருமல் இருக்கா?

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட, ◾வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ◾பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். ◾சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருக வேண்டும். ◾இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். ◾கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ◾குறிப்பாக, தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.
News September 26, 2025
TN கல்விமுறை மற்றவர்களுக்கு முன்மாதிரி: ரேவந்த் ரெட்டி

சமூக நீதிக் கொள்கைகளில் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா இடையே ஒற்றுமைகள் இருப்பதாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்வி நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு கல்வி முறை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக கூறினார். மேலும் தெலங்கானா அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News September 26, 2025
ஜாக் மாவின் பொன்மொழிகள்

✪ கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம் ✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு ✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியசமானவராக இருக்க வேண்டும் ✪ யோசனைகள் எதுவென்பது முக்கியமல்ல; அவற்றை செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம் ✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.