News April 13, 2024

தேனி மழைப்பொழிவு விவரம்

image

தேனி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. போடிநாயக்கனூரில் 6 செ.மீட்டரும், மஞ்சளார், சோத்துப்பாறை, பெரியகுளம் பகுதிகளில் 3 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

Similar News

News November 30, 2025

தேனி: வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்பு அதிகாரி (SO) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 115 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.E / B.Tech, முதுகலை படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 – ரூ.1,20,940 வழங்கப்படும். நவ. 30(இன்று)-க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வேலை தேடும் நண்பர்களுக்காக உடனே SHARE பண்ணுங்க.

News November 30, 2025

தேனி: தீ விபத்தில் மூதாட்டி பலி.!

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (65). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த பொழுது உடலில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.28) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 30, 2025

தேனி: பால் கொள்முதலில் லட்சக் கணக்கில் மோசடி

image

சின்னஒவுலாபுரத்தில் உள்ள சமா டெய்ரி புராடக்ட் பால்பண்ணை மேலாண்மை இயக்குநராக இருப்பவர் மதுரம். இவரிடம் தேனி, பாலகிருஷ்ணாபுரத்தை சேர்த்த காஞ்சி டெய்ரி பூட்ஸ் நிறுவன உரிமையாளர் பாண்டியராஜன் பால் கொள்முதல் செய்துள்ளார். ஆனால் கொள்முதல் செய்த பாலுக்கு செலுத்த வேண்டிய 10, 84,177 ரூபாயை அவர் வழங்கவில்லை. இதுகுறித்து மதுரம் அளித்த புகாரில் இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (நவ.29) செய்து விசாரணை.

error: Content is protected !!