News September 25, 2025
உஷார்! குழந்தைகளை இதுல படுக்க வைக்காதீங்க

குழந்தைகள் தூங்கும் மெத்தைகளில் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. Phthalates, flame retardants இருக்கும் சிந்தடிக் மெத்தைகளில் படுக்கும்போது, அவர்களது உடல் வெப்பத்தால் இவை காற்றில் வெளியாகி உடலில் கலக்கிறதாம். எனவே, ஆர்கானிக் பருத்தி, லேடெக்ஸ் மெத்தைகளை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளை காக்க இத எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 470
▶குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
▶பொருள்: தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்ட மாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.
News September 26, 2025
நட்புக்கு இலக்கணம் அண்ணாமலை: டிடிவி தினகரன்

அண்ணாமலையின் தூண்டுதலே தனது செயல்பாடுகளுக்கு காரணம் என சிலர் சொல்வது முற்றிலும் தவறு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நட்புக்கு சிறந்த இலக்கணம் அண்ணாமலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரே பதில் அளித்துள்ளார் என தெரிவித்த டிடிவி, அவர் எல்லாவற்றையும் கடந்து தனது செயல்பாடுகளால் உயர்ந்த நிலைக்கு வருவார் எனவும் கூறியுள்ளார்.
News September 26, 2025
சித்தராமையா கோரிக்கைக்கு NO சொன்ன விப்ரோ நிறுவனர்

பெங்களூருவில் போக்குவரத்தை கட்டுப்படுத்த விப்ரோ வளாக சாலையில், பொது வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என CM சித்தராமையா வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் CM கோரிக்கையை விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்தார். விப்ரோ வளாகத்தில் பொதுமக்களை அனுமதிப்பது நீண்டகால தீர்வு அல்ல என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் போக்குவரத்தை சரிசெய்ய தொழில்நுட்பம் சார்ந்து உதவ தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.