News September 25, 2025
இந்தியா – வங்கதேச உறவில் விரிசல்: முகமது யூனுஸ்

வங்கதேசம் – இந்தியா இடையேயான உறவில் விரிசல் இருப்பதாக வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். ஐநா நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், இது இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும், வங்கதேச பிரச்னையின்போது சில இந்திய மீடியாக்கள் போலி தகவல்களை பரப்பியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News September 26, 2025
சித்தராமையா கோரிக்கைக்கு NO சொன்ன விப்ரோ நிறுவனர்

பெங்களூருவில் போக்குவரத்தை கட்டுப்படுத்த விப்ரோ வளாக சாலையில், பொது வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என CM சித்தராமையா வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் CM கோரிக்கையை விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி நிராகரித்தார். விப்ரோ வளாகத்தில் பொதுமக்களை அனுமதிப்பது நீண்டகால தீர்வு அல்ல என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் போக்குவரத்தை சரிசெய்ய தொழில்நுட்பம் சார்ந்து உதவ தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
News September 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 26, புரட்டாசி 10 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News September 26, 2025
திருப்பதி கூட்டத்தை கட்டுப்படுத்த AI தொழில்நுட்பம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க AI தொழில்நுட்பத்தை தேவஸ்தானம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தரிசன வரிசையில் சந்தேகத்துக்குரிய நபர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் முடியும். மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை உடனுக்குடன் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விரைவான தரிசன ஏற்பாட்டுக்கு இது வழிவகுக்கும்.