News September 25, 2025
OG படத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பவன் கல்யாணின் ‘They Call Him OG’ என்ற படம் இன்று வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இதில் அர்ஜுன் தாஸின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனக்கே உரித்தான தனித்துவ குரலால் கட்டிப்போட்ட அவரது நடிப்பிற்கு பாராட்டுகளும் குவிகின்றன.
Similar News
News September 26, 2025
திருப்பதி கூட்டத்தை கட்டுப்படுத்த AI தொழில்நுட்பம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க AI தொழில்நுட்பத்தை தேவஸ்தானம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தரிசன வரிசையில் சந்தேகத்துக்குரிய நபர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும் முடியும். மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை உடனுக்குடன் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விரைவான தரிசன ஏற்பாட்டுக்கு இது வழிவகுக்கும்.
News September 26, 2025
உங்கள் போன் உங்களை உளவுப் பார்க்கிறதா?

நீங்கள் எங்கே செல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் போன் மூலம் மோசடியாளர்கள் உளவுப் பார்க்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க: *போன்களில் ஆப்களுக்கு லொக்கேஷன் அனுமதியை தவிர்க்கலாம் *நம்பகமல்லாத Caller ID, Spam protection ஆப்களை தவிர்க்கவும் *வை-பை, புளூடூத் ஆட்டோ கனெக்ஷனை / டிடெக்ஷனை ஆப் செய்யவும் *NFC, Contactless payments-ஐ ஆஃப் செய்யவும் *மெசேஜில் Link preview-ஐ Disable செய்யவும்.
News September 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.