News September 25, 2025
நாகை: 10th போதும்.. அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News September 25, 2025
நாகையில் 1225 விவசாயிகள் பயன்

நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்டு உள்ள 54 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 8678 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1225 விவசாயிகள் பயன் அடைந்து அதற்கான தொகை ரூபாய் 18 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
நாகையில் நெடுந்தூர ஓட்ட போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்ட போட்டி எதிர்வரும் செ.28 காலை 8 மணிக்கு நாகை மீன்வளத்துறை பொறியியல் கல்லூரி முதல் துவங்கி கங்களாஞ்சேரி ரோட்டில் நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்லாதவர், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
நாகை விவசாயிகள் கவனத்திற்கு; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு பண்ணை, குட்டை மற்றும் இதர நீர் ஆதாரங்கள் உள்ளதை உறுதி செய்து கொண்டு, சாகுபடி மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு பிப் .15க்கு பிறகு காவேரி பாசன நீர்வரத்து குறைந்து பயிர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் தாளடி நெல் பயிரை பிப்.15 ஆம் தேதிக்குள் அறுவடைக்கு வரும் வகையில் தாளடி மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரித்துள்ளார்.