News September 25, 2025

பிஹாரிலும் பாமக போட்டி?

image

பிஹாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழ சின்னத்தை அன்புமணி பெற்றதாக ராமதாஸ் தரப்பு கூறி வருகிறது. ஜப்பான், மொரிஷியஸில் கூட அன்புமணி போட்டியிடுவார் என ராமதாஸும் கலகலப்பாக சாடியிருந்தார். இந்நிலையில், இதுவரை கர்நாடகா, ஆந்திரா, டெல்லி தேர்தல்களில் பாமக போட்டியிட்டுள்ளதால், எதிர்வரும் பிஹார் தேர்தலிலும் போட்டியிடுவது குறித்து தலைமை (அன்புமணி) முடிவெடுக்கும் என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

Similar News

News September 25, 2025

கொசுக்களுக்கு பிடித்த BLOOD GROUP எது தெரியுமா?

image

அனைவரையும் கொசு கடிக்கிறது என்றாலும், ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் குறிவைத்து கடிக்க அவர்களின் ரத்த வகை தான் காரணம் என்பது தெரியுமா? கொசு குறிவைத்து கடிப்பதில் முதல் இடத்தில் ‘O’ வகை பிளட் குரூப்பினரும், 2-வது இடத்தில் ‘B’ வகையினரும் உள்ளனர். இவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் அதிகமாக காணப்படும் லாக்டிக் ஆசிட் கொசுக்களை ஈர்க்கும் மணத்தை கொண்டுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

News September 25, 2025

ஆயுத பூஜை விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

image

ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறையையொட்டி TNSTC சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. நாளை(செப்.26) முதல் செப்.30 வரை பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து 3,130 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாகவும் <>www.tnstc.in<<>> என்ற இணையதளத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. SHARE IT.

News September 25, 2025

OG படத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ்

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பவன் கல்யாணின் ‘They Call Him OG’ என்ற படம் இன்று வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இதில் அர்ஜுன் தாஸின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனக்கே உரித்தான தனித்துவ குரலால் கட்டிப்போட்ட அவரது நடிப்பிற்கு பாராட்டுகளும் குவிகின்றன.

error: Content is protected !!