News April 13, 2024
நெல்லை மழைப்பொழிவு விவரம்

திருநெல்வேலி மாவட்டத்திக்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. காக்காச்சி, மாஞ்சோலை, ஊத்து, அம்பாசமுத்திரம் பகுதியில் 3 செ.மீட்டரும், ராதாபுரம், நாலுமுக்கு, பாபநாசம், கன்னடியன் கால்வாய், களக்காடு பகுதியில் 2 செ.மீட்டரும், மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணை, சேரன்மகாதேவி பகுதியில் 1 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.
Similar News
News September 18, 2025
நெல்லை இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

நெல்லை மாவட்டத்தில் நாளை செப்.19 காலை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிதம்பரம் நகர், பெருமாள்புரத்தில் நடைபெற உள்ளது. . சம்பளம் தகுதிக்கேற்ப 50,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 355க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு காத்து கொண்டு உள்ளது. SO நாளைக்கு MISS பண்ணிடாதீங்க.. இங்கு <
News September 18, 2025
அம்பையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஊதிய தாமதத்தைக் கண்டித்து (செப். 17) அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி ஆணையர் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தி, அன்றே ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இனி ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததால், பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
News September 17, 2025
நெல்லை: விஷவாயு தாக்கி ஒருவர் பலி..!

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.