News September 25, 2025

BREAKING: இனி ₹20-க்கு சாப்பாடு.. HAPPY NEWS

image

IRCTC உடன் இணைந்து பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக ‘சிக்கன உணவு’ திட்டத்தை தெற்கு ரயில்வே(SR) விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ரயில் நிலையங்களில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெற்கு SR உத்தரவிட்டுள்ளது. ₹20-க்கு 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை, தயிர், புளி சாதங்கள், கிச்சடி & பூரி-கிழங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Similar News

News September 25, 2025

₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

image

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாம். 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன., முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News September 25, 2025

விண்வெளியில் விளைக்கப்பட்ட முதல் காய்கறி எது தெரியுமா?

image

உருளைக்கிழங்கு தான் விண்வெளியில் விளைக்கப்பட்ட முதல் காய்கறி. விண்வெளியில் உணவு பொருட்களை விளைவிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் நாசாவும் விஸ்கான்சின் பல்கலையும் இணைந்து செயல்பட்டன. இதற்காக 1995-ல் கொலம்பிய விண்கலத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு விளைந்த உருளைக்கிழங்கை வீரர்கள் உண்ணவில்லை. ஆய்வு செய்வதற்காக அவை பூமிக்கு கொண்டுவரப்பட்டன. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News September 25, 2025

தன் சாதனையை தகர்த்த சிறுமிக்கு கமல் பாராட்டு

image

தேசிய விருது வென்ற 4 வயது சிறுமியை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘நாள் 2’ படத்திற்காக சிறுமி த்ரிஷா தோஷர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வென்றிருந்த நிலையில், நான் 6 வயதில் தான் வென்றிருந்தேன், அதை தற்போது நீங்கள் முறியடித்துள்ளீர்கள் என கமல்ஹாசன் x-ல் வாழ்த்து கூறியுள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்திற்காக கமல் 6 வயதில் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!