News September 25, 2025

நாகை: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி

image

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் கிராமம் மாற்றங்களை தெருவை சேர்ந்த செல்வன். கவியரசன் என்பவர் முடிகொண்டான் ஆற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் பொது நிவாரணம் நிதியிலிருந்து வரப்பெற்ற ரூபாய் 3 லட்சம் நிதி உதவிக்கான காசோலையினை இறந்தவரின் தாயாரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப ஆகாஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேற்று வழங்கினர்.

Similar News

News September 25, 2025

நாகை: 10th போதும்.. அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>க்ளிக் செய்யவும். (LIKE & SHARE பண்ணுங்க)

News September 25, 2025

நாகை விவசாயிகள் கவனத்திற்கு; ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு பண்ணை, குட்டை மற்றும் இதர நீர் ஆதாரங்கள் உள்ளதை உறுதி செய்து கொண்டு, சாகுபடி மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு பிப் .15க்கு பிறகு காவேரி பாசன நீர்வரத்து குறைந்து பயிர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் தாளடி நெல் பயிரை பிப்.15 ஆம் தேதிக்குள் அறுவடைக்கு வரும் வகையில் தாளடி மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரித்துள்ளார்.

News September 25, 2025

நாகை: அரசு தேர்வாளர்களுக்குப் முக்கிய அறிவுறுத்தல்

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற செப்.28ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ அடங்கிய தேர்வு நடைபெற உள்ளது. இதில், 13 தேர்வு மையங்களில் 3907 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர் . தேர்வு நாளன்று 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு மைய அமைவிடத்திற்கு வருகை தர வேண்டும். 9மணிக்கு மேல் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!