News September 25, 2025
‘Chennai One’ வச்சு இருக்கீங்களா? உங்களுக்கு தான் இது!

சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ‘சென்னை ஒன்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி மூலம் பேருந்து, மெட்ரோ, புறநகர் மின்சார ரயில், ஆட்டோ மற்றும் கார் போன்ற அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே QR குறியீடு பயணச்சீட்டைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தச் செயலியில் எடுக்கும் மின்சார ரயிலுக்கான பயணச்சீட்டு 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News September 25, 2025
சென்னை வந்தார் தெலுங்கானா முதல்வர்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்தார். சென்னை வந்த ரேவந்த் ரெட்டியை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News September 25, 2025
தேனாம்பேட்டையில் மாணவர்கள் மோதல்: 8 மீது வழக்கு

தேனாம்பேட்டை டிஎம்எஸ் பகுதியில் 2 கல்லூரி மாணவர்களும் மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் ராயப்பேட்டை GH-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் 8 நபர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 25, 2025
சென்னை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <