News September 25, 2025
நாமக்கல்லில் களமிறங்கும் விஜய்: எப்போது தெரியுமா?

தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் செப்.27 நாமக்கல் மற்றும் கரூரில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். நாமக்கல்லில் ஆண்டகலூர் கேட் சந்திப்பில் காலை 11.00 அளவில் விஜய்க்கு வரவேற்பு நிகழ்வும், நகரின் மத்தியில் பழைய RTO ஆபீஸ் எதிரே 100 அடி சாலையில் மக்கள் மத்தியில் பேசவுள்ளார். இந்தநிலையில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த,பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி நாமக்கல் எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (1.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
நாமக்கல் வருகை தந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு!

நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியனுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 1, 2025
நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

1. 12வது முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – https://nabfins.org/ 2. இந்தியன் ரயில்வேயில் 2569 வேலை- https://www.rrbapply.gov.in/ 3.10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை – https://www.tnrd.tn.gov.in/ 4.மத்திய அரசு பெல் நிறுவனத்தில் வேலை – https://bel-india.in/ 5. ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் வேலை – https://ongcapprentices.ongc.co.in/. (ஷேர் பண்ணுங்க)


