News September 25, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News September 25, 2025
நாகை: மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது செப். 27 அன்று காலை 7 மணிக்கு நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் இருந்து துவங்கி கங்களாஞ் சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 25, 2025
நாகை: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் கிராமம் மாற்றங்களை தெருவை சேர்ந்த செல்வன். கவியரசன் என்பவர் முடிகொண்டான் ஆற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் பொது நிவாரணம் நிதியிலிருந்து வரப்பெற்ற ரூபாய் 3 லட்சம் நிதி உதவிக்கான காசோலையினை இறந்தவரின் தாயாரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப ஆகாஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேற்று வழங்கினர்.
News September 25, 2025
நாகை: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் கீழையூர் வட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டு இருக்கும் நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் ஏற்பட்டு இருப்பது வேளாண் அலுவலர்களால் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் தேவைக்கு அதிகமாக யூரியா உரம் பயன்படுத்தாமல் வேப்பெண்ணை சார்ந்த பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தவும் என மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளார்