News September 25, 2025

சாந்தோம்: மாணவர்களுடன் உணவருந்திய MLA வேலு

image

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள மெரினா பார்க்கில் நேற்று (செப் 24), மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா. வேலு, 51 பள்ளி குழந்தைகளுடன் மதிய உணவு உண்டார். “உண்டு மகிழ்” என்ற திட்டத்தின் கீழ், தொடர்ந்து 51-வது மாதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் நோக்கம், குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதாகும். மேலும் அவர் குழைந்தைகளுடன் உரடியாடினார்.

Similar News

News September 25, 2025

சென்னை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க.

News September 25, 2025

நாய்கள் பராமரிப்புக்காக ரூ.7.67 கோடி ஒதுக்கீடு

image

சென்னையில் தெருநாய்களைப் பராமரிக்க வேளச்சேரி, மாதவரம் ஆகிய இரண்டு பகுதிகளில் புதிய மையங்களை மாநகராட்சி அமைக்க உள்ளது. இதற்காக ரூ.7.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரேபிஸ் மற்றும் ஆக்ரோஷமான குணம் கொண்ட சுமார் 500 நாய்களைப் பிடித்து இந்த மையங்களில் வைத்து பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

News September 25, 2025

‘Chennai One’ வச்சு இருக்கீங்களா? உங்களுக்கு தான் இது!

image

சென்னை மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ‘சென்னை ஒன்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி மூலம் பேருந்து, மெட்ரோ, புறநகர் மின்சார ரயில், ஆட்டோ மற்றும் கார் போன்ற அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே QR குறியீடு பயணச்சீட்டைப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தச் செயலியில் எடுக்கும் மின்சார ரயிலுக்கான பயணச்சீட்டு 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!