News September 25, 2025
ராமநாதபுரம்: ரேபிஸ் நோயால் சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் தெருநாய் கடித்ததால் 17 வயது சிறுவன் ஒருவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆரம்பத்தில் நாயைப் போல நடந்துகொண்ட சிறுவன், மருத்துவமனையில் ரேபிஸ் இருப்பது கண்டறியப்பட்டதால் மாற்று சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனுடன் தொடர்பிலிருந்த 25 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.இது தெருநாய் கட்டுப்பாட்டின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது.
Similar News
News September 25, 2025
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை., கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, 2025–2026 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர கல்வி வெளிநாடு சென்று படிக்கும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News September 25, 2025
ராம்நாடு: கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

ராமநாதபுரம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தொடங்கி வைத்தார். இங்கு நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின், மண்டல துணை மேலாளர் தீபா, விற்பனை நிலைய மேலாளர் பாண்டியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News September 25, 2025
ராம்நாடு: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

இராமநாதபுரம் மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கபபடும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <