News September 25, 2025

நாமக்கல் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்

image

நாமக்கல், கொசவம்பட்டியை சேர்ந்தவர் வீரக்குமாரன், 38; இவர் மது விற்ற வழக்கில், மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராக, நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு வந்த வீரக்குமாரன், அங்கிருந்த மதுவிலக்கு போலீஸ் கார்த்திக் என்பவருக்கு, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து புகார்படி, வீரக்குமாரன் மீது சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 2, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (1.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

நாமக்கல் வருகை தந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு!

image

நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை புரிந்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியனுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News November 1, 2025

நாமக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

image

1. 12வது முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – https://nabfins.org/ 2. இந்தியன் ரயில்வேயில் 2569 வேலை- https://www.rrbapply.gov.in/ 3.10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை – https://www.tnrd.tn.gov.in/ 4.மத்திய அரசு பெல் நிறுவனத்தில் வேலை – https://bel-india.in/ 5. ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் வேலை – https://ongcapprentices.ongc.co.in/. (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!