News April 13, 2024
எங்களுக்கு திருமணம் ஆகவில்லை

தனக்கும் நடிகை அஞ்சு குரியனுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், நடிகர் தர்ஷன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருவருக்கும் திருமணமானது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், அது புது ஆல்பம் பாடல் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கார்த்திக் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் பாடலுக்கு, ‘எண்டே ஓமனே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
ஒரு யூனிட் மின்சாரம் ₹3.50-க்கு கிடைக்க வாய்ப்பு!

மகாராஷ்டிராவில் 2 தோரியம் அடிப்படையிலான மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. உலகளவில் யுரேனியம் மூலம் அதிக மின்சாரம் பெறப்படும் நிலையில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற குறைந்த விலையில் மின்சாரம் இனி கிடைக்கும். TN-ல் தற்போது பயன்பாட்டை பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ₹4.95 – ₹12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
News January 26, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
News January 26, 2026
2026, 2031-ல் திமுக ஆட்சி தான்: ராஜ கண்ணப்பன்

பார்லிமெண்ட் தேர்தலில் PM மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். மேலும், 2026, 2031-ல் திமுக தான் மீண்டும் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றவர், சுதந்திரம் அடைந்து மக்களுக்கு தேவையான குடிநீர், பாசனம், போக்குவரத்து, உணவு, கல்வி என அனைத்தும் திமுக ஆட்சியில் தான் சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் பேசியுள்ளார்.


