News September 25, 2025

திருவாரூர்: ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு

image

ரயில்வே சந்திப்பில் பொது மேலாளர் உத்தரவின் பேரில், 588 மீட்டர் தூரத்திற்கு சிவப்பு வண்ண கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால் செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை நடைமேடை ஒன்று, இரண்டில் ஆகிய ஓடும் தலத்தில் ரயில் போக்குவரத்து இருக்காது. மேலும் அதற்குப் பதிலாக, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய நடைமேடையைப் பயணிகள் பயன்படுத்தலாம் என்று ரயில்வே துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 25, 2025

திருவாரூர்: கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து அறிவிப்பு

image

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-Yasasvi-Top class education in schools for OBC,EBC and DNT students கல்வி உதவித்தொகை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டலில் விண்ணப்பத்து பயன்பெறலாம் எனவும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

News September 25, 2025

திருவாரூர்: மாவட்ட அளவிலான என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட அளவிலான என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் கூட்டம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை (செப்.24) நடைபெற்றது. இதில் மாவட்ட தொடர்பு அலுவலர் சக்கரபாணி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் புலிவலம் உலகநாதன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி சிறப்பு முகாம் முழுப் பாதுகாப்புடனும் பள்ளி கல்வி இயக்ககம் தந்துள்ள விதிமுறைகள் படியும் சிறப்பாக நடத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!