News September 25, 2025
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சாலைகளில் விவசாய பொருட்களை காய வைப்பது – சேமித்து வைப்பதால், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இடையூறாகவும் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே சாலைகளில் விவசாய பொருட்களை காய வைப்பது, சேமித்து வைப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டாம். வாகன ஓட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுருத்தியுள்ளார்.
Similar News
News September 25, 2025
குறுவை சாகுபடி 1 லட்சம் ஏக்கர் மேல் அறுவடை என ஆட்சியர் அறிவிப்பு

2025-26 ஆம் ஆண்டு 1,97,100 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு
1,00,270 ஏக்கர் பரப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா/தாளடி பருவத்தில் 21,980 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 346 மெட்ரிக் டன்னும் தனியார் விற்பனை நிலையங்களில் 1980 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளது. என ஆட்சியர் தெரிவித்தார்.
News September 25, 2025
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் தொகை ஒதுக்கீடு

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு ரூபாய் 1712.88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இயந்திரம் நடவு பணி மேற்கொள்ளும் 48,000 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 4,000 விதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உயிர் உரம், நுண்நூட்ட உரங்கள் மற்றும் விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது என விவசாய குறைந்திருக்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
தஞ்சை: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

தஞ்சாவூர்: மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த LINK-ஐ கிளிக் செய்து, வரும் அக்.07-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். B.E முடித்துவிட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!