News September 25, 2025
ASIA CUP: இந்தியா In.. இலங்கை Out!

ஆசிய கோப்பை தொடரில் நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளில் தோற்ற இலங்கைக்கு, வங்கதேசம் வென்றால் ஃபைனலுக்கு செல்ல சிறிது வாய்ப்பு இருந்தது. ஆனால், நேற்றைய இந்தியாவின் வெற்றி இலங்கைக்கான வாய்ப்பை தகர்த்தது. வரும் 28-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
Similar News
News September 25, 2025
KKC பாலுவிற்கு கலைமாமணி விருது: விசிக எதிர்ப்பு

KKC பாலுவிற்கு கலைமாமணி விருது அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாக அமையும் என வன்னியரசு விமர்சித்துள்ளார். வள்ளி கும்மி மூலம் வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம் என பெண்களிடம், சத்தியம் வாங்கிய KKC பாலுவை சாதியவாதி என குறிப்பிட்டுள்ள அவர், விருது அறிவிப்பை TN அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், வள்ளி கும்மியை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News September 25, 2025
தீபாவளி ஆஃபர்.. போன்கள் விலை குறைகிறது

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஓராண்டுக்கு முன் அறிமுகமான பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலையை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபோன் 16 சீரிஸ் போன் விலை அதிகபட்சமாக ₹50,000 வரை (நிபந்தனைகள் உண்டு) குறைந்து, ஆஃபரில் கிடைக்க உள்ளன. அதேபோல் சாம்சங்கின் S24 Ultra ₹58,000, OnePlus 13 சீரிஸ் சராசரியாக ₹12,000, Vivo T4x ₹8,000, Motorola Razr 60 ₹10,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளது.
News September 25, 2025
விரைவில் 3,227 ஆசிரியர்கள் நியமனம்: அன்பில்

டெட் தேர்வு குறித்த தீர்ப்பை நினைத்து ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம், நான் இருக்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 2021 முதல் 8,388 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 3,227 ஆசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், எங்கும் ஆசிரியர் இல்லாத வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.