News September 25, 2025
மோசடியை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய திட்டம்

வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர் நீக்கத்தை தடுக்க புதிய நடைமுறையை ECI அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி ஒருவர் பெயர் நீக்கத்திற்கு மனு அளித்தால், அதுதொடர்பாக அவர்களின் செல்போன் எண்ணுக்கு OTP செல்லுமாம். அதை பதிவிட்ட பிறகே வாக்காளரின் பெயர் நீக்கம் செய்யப்படுமாம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்களர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 25, 2025
BREAKING: பள்ளி வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் மாணவன்

நெல்லை, வள்ளியூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் அமர்வது தொடர்பாக இரண்டு மாணவர்களிடையே பிரச்னை இருந்த நிலையில், ஒரு மாணவன் தான் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சற்றுமுன் கொடூரமாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மாணவன் தனியார் ஹாஸ்பிடலில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News September 25, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற வசதியின் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.
News September 25, 2025
BREAKING: அதிமுக புதிய கூட்டணியா? பரபரப்பு

TTV, OPS விவகாரத்தில் பாஜக, அதிமுக இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது இருக்கும் கூட்டணி பிரியலாம், புதிய கூட்டணி அமையலாம் எனக் கூறி EX மினிஸ்டர் கடம்பூர் ராஜு அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளார். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருப்பதால் புதிய கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். நேற்று EPS-ம் கூட்டணியை நம்பி அதிமுக இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.