News September 25, 2025

‘வட சென்னை 2’ அப்டேட் கொடுத்த தனுஷ்

image

‘வட சென்னை 2’ படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ‘இட்லி கடை’ பட விழாவில் தனுஷ் மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். ‘வட சென்னை 2’ ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், படம் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன் ரசிகர்கள் உற்சாகமாக கத்தி அரங்கத்தை அதிர வைத்தனர். சிம்பு படத்தை வெற்றிமாறன் முடித்தவுடன் இந்த படம் தொடங்கும் என தெரிகிறது.

Similar News

News September 25, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. போலீஸை சாடும் அன்புமணி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் CBI விசாரணையை வரவேற்றுள்ள அவர், இந்த கொலையின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படுவதை CBI உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், TN அரசு CBI விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

News September 25, 2025

ASIA CUP: இந்தியா In.. இலங்கை Out!

image

ஆசிய கோப்பை தொடரில் நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கெனவே சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளில் தோற்ற இலங்கைக்கு, வங்கதேசம் வென்றால் ஃபைனலுக்கு செல்ல சிறிது வாய்ப்பு இருந்தது. ஆனால், நேற்றைய இந்தியாவின் வெற்றி இலங்கைக்கான வாய்ப்பை தகர்த்தது. வரும் 28-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

News September 25, 2025

தமிழ்நாட்டுக்கு முன் இத்தனை மாநிலங்களா?

image

அவசரமான நவீன யுகத்தில் விமான போக்குவரத்து முக்கிய பங்காக உள்ளது. இந்தியாவில் அதிக விமான நிலையங்கள் கொண்ட மாநிலங்கள் எவை என உங்களுக்கு தெரியுமா? 13 விமான நிலையங்களுடன் மகாராஷ்டிராதான் முதல் இடத்தில் உள்ளது. அப்போ தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? அதற்கு மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த விமான நிலையம் எது என்று கமெண்ட் பண்ணுங்க..

error: Content is protected !!