News September 25, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.24) இரவு 10 மணி முதல் இன்று(செப்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலர்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 25, 2025
நாகை விவசாயிகள் கவனத்திற்கு; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுக்கு பண்ணை, குட்டை மற்றும் இதர நீர் ஆதாரங்கள் உள்ளதை உறுதி செய்து கொண்டு, சாகுபடி மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு பிப் .15க்கு பிறகு காவேரி பாசன நீர்வரத்து குறைந்து பயிர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் தாளடி நெல் பயிரை பிப்.15 ஆம் தேதிக்குள் அறுவடைக்கு வரும் வகையில் தாளடி மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரித்துள்ளார்.
News September 25, 2025
நாகை: அரசு தேர்வாளர்களுக்குப் முக்கிய அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற செப்.28ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ அடங்கிய தேர்வு நடைபெற உள்ளது. இதில், 13 தேர்வு மையங்களில் 3907 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர் . தேர்வு நாளன்று 8.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு மைய அமைவிடத்திற்கு வருகை தர வேண்டும். 9மணிக்கு மேல் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 25, 2025
நாகை: மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது செப். 27 அன்று காலை 7 மணிக்கு நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் இருந்து துவங்கி கங்களாஞ் சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.