News April 13, 2024
காவிரி ஆற்றில் தேர்தல் விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ள மணல் சிற்பத்தையும், தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் இன்று பார்வையிட்டார்.
மேலும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதனை மாணவ, மாணவிகள் என அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
Similar News
News July 7, 2025
திருச்சி: காய்கறி விதைகளுக்கு 75 % மானியம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க, 75 % மானியத்தில், ரூ.7,500 மதிப்புள்ள காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருச்சி: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
News July 7, 2025
திருச்சி: தபால் நிலையத்தில் மொபைல் சார்ஜிங் வசதி அறிமுகம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தலைமை தபால் நிலையத்தில் “மொபைல் சார்ஜிங் நிலையம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இணைப்புகள் கொண்ட இந்த மொபைல் சார்ஜிங் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மண்டல பொது மேலாளர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.