News April 13, 2024
பெண்கள் பயனடைய கடன் வழங்குகிறோம்

பிரதமர் மோடி குடும்ப அரசியல் செய்யவில்லை, நாட்டு மக்களை குடும்பமாக பார்ப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நீலகிரியில் எல்.முருகனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான அனைத்தையும் பிரதமர் மோடி செய்து வருவதாக கூறினார். சுய உதவி குழுக்களில் உள்ள அனைத்து பெண்களும் பயனடையும் வகையில் மோடி கேரண்டி மூலம் கடன் வழங்கப்படுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
Similar News
News July 9, 2025
சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.
News July 9, 2025
கொடுக்குற காசுக்கு மட்டும் கூவுங்கோ.. அக்கறையில் Infosys

ஒரு நாளில் 9.15 மணிநேரத்தை தாண்டி வேலை பார்த்தால் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் நுட்பத்தை Infosys கொண்டுவந்துள்ளது. ‘உங்கள் அர்ப்பணிப்பை பாராட்டுகிறோம், அதேநேரம் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது’ என்றவாறு மெயிலும் அதிக நேரம் பணி செய்பவர்களுக்கு வருகிறதாம். முன்பு, இந்தியர்கள் வாரத்துக்கு 70 மணிநேரம் பணியாற்றினால்தான் நாடு பொருளாதார வளர்ச்சியை அடையும் என அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியிருந்தார்.
News July 9, 2025
பாஜகவை விட அதிமுகவே துரோகம் செய்கிறது: கனிமொழி

2024 தேர்தலில் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, தற்போது பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், பாஜகவை விட அதிமுகவே தமிழகத்திற்கு துரோகம் செய்வதாகவும் சாடினார். மேலும், மத்திய அரசு என்ன செய்கிறது, மாநில அரசு என்ன செய்கிறது என்றுகூட தெரியாமல் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சிலர் வாக்கு கேட்டு வருவதாக விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.