News April 13, 2024

போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கிய எஸ்பி

image

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு மக்கான் சிக்னல் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  இன்று (ஏப்ரல் 13) நீர் மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 8, 2025

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

image

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காட்பாடி தொகுதிக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாறன், வேலூருக்கு ஆர்.டி.ஓ செந்தில்குமார், அணைக்கட்டு தொகுதிக்கு கலால் உதவி கமிஷனர் ஜெயசித்ரா, கே.வி.குப்பம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News December 8, 2025

வேலூர்: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை!

image

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 8, 2025

வேலூர்: பைக் மோதி துடிதுடித்து பலி!

image

வேலூர்: சேண்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஆண்டாள்(67). இவர், நேற்று(டிச.7) அப்பகுதியில் உள்ள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது பைக் மோதி தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். பைக்கில் மோதிய முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர், அவரது தாயார் காயமடைந்தார். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!