News September 24, 2025
மின்னல்கள் கூத்தாடும் ஏரி.. அதிசயமான போட்டோஸ்!

வெனிசுலாவின் மையத்தில் அமைந்துள்ள மரகைபோ ஏரி, அதன் தனித்துவமான சுற்றுச்சூழலால் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்தாலும், ஏரிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது மின்னல்களின் அசாதாரண நிகழ்வுதான். இங்கு மின்னல்கள் இல்லாத இரவே இல்லை. ஆண்டுக்கு சுமார் 300 இரவுகளில் இங்கு மின்னல்கள் ஏற்படுகிறது. இந்த ஏரி, “உலகின் மின்னல் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் இல்லை.
Similar News
News September 25, 2025
லோகோவை மாற்றிய சுசுகி

22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி தனது பிராண்ட் லோகோவை மாற்றியுள்ளது. 1958 முதல் பயன்பாட்டில் உள்ள S-வடிவ லோகோ முதன்முதலில் 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது புதிதாக ஷார்ப்பான வடிவத்தில் இருந்து பிளாட்டாக ‘S’ லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஸ்லோகனும் ‘உங்களின் பக்கம்’ என மாற்றப்பட்டுள்ளது.
News September 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 469
▶குறள்: நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
▶பொருள்: ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
News September 25, 2025
விஜய்யின் பரப்புரை பயணத்தில் மாற்றம்

விஜய்யின் கடலூர் பரப்புரை பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு நவ.22-ம் தேதி திட்டமிட்டிருந்த இந்த பயணம் அக்.11-ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் தலைமை தபால் நிலையம், உழவர் சந்தை ஆகிய இடங்களில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு, கடலூர் எஸ்.பி.க்கு தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் விஜய் கரூர் மற்றும் நாமக்கல்லில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.