News September 24, 2025
BREAKING: நாமக்கல்லில் விஜய் பரப்புரைக்கு அனுமதி!

தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நாமக்கல்லில் வரும் செப்.27ம் தேதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இவர் காலை 10 மணிக்கு நாமக்கல் பொய்யேரி கரை சாலையில் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் பரப்புரை செய்ய 20க்கும் அதிக நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்ப்பு!
Similar News
News November 3, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (02.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
நாமக்கல் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்வு!

நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். யோகாவில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் இன்று நவம்பர். 3 அன்று மாலை அசல் சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
நாமக்கல்லில் நவ.5-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் புதன்கிழமைகளில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை முகாமில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.


