News September 24, 2025
வான் படையின் சீனியர் வீரனுக்கு ஓய்வு

6 தசாப்தங்களாக இந்திய விமானப்படையில் பணியாற்றிய MiG-21 ரக சூப்பர் சோனிக் போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள பிரியாவிடை நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ஏபி சிங் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ரஷ்ய தயாரிப்பான MiG-21 கடந்த 1963-ல் படையில் சேர்க்கப்பட்டது. 1965 முதல் இந்தியாவின் அனைத்து போர்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன.
Similar News
News September 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 25, புரட்டாசி 9 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News September 25, 2025
‘வட சென்னை 2’ அப்டேட் கொடுத்த தனுஷ்

‘வட சென்னை 2’ படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ‘இட்லி கடை’ பட விழாவில் தனுஷ் மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். ‘வட சென்னை 2’ ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், படம் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை கேட்டவுடன் ரசிகர்கள் உற்சாகமாக கத்தி அரங்கத்தை அதிர வைத்தனர். சிம்பு படத்தை வெற்றிமாறன் முடித்தவுடன் இந்த படம் தொடங்கும் என தெரிகிறது.
News September 25, 2025
முப்படைகளின் தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்பு

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2026 மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பின், 2022 செப்டம்பரில் அனில் சவுகான் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.