News September 24, 2025
இந்தியாவின் தூய்மையான கிராமத்துக்கு செல்ல தயாரா?

ஆசியாவின் மிகவும் தூய்மையான கிராமம் என்று அழைக்கப்படும் மவ்லின்னாங், மேகாலயாவின் கிழக்கு காசி மலையில் அமைந்துள்ளது. இங்கு மூங்கில் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துகின்றனர். தலைமுறை தலைமுறையாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வருகின்றனர். மேலும், இதன் ரம்மியமான இயற்கை அழகு மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த கிராமத்தை நிச்சயம் ஒருமுறை விசிட் செய்யனும். நீங்க எப்படி?
Similar News
News September 25, 2025
முப்படைகளின் தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்பு

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருந்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் 2026 மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பின், 2022 செப்டம்பரில் அனில் சவுகான் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
News September 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 25, 2025
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி: தமிழிசை

சமூக நீதியை உண்மையாகவே ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால் இந்த ஆட்சியில் மீதமிருக்கும் 6 மாதங்களிலாவது திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார். இது, திமுக கூட்டணி என்ற தேன் கூட்டில் கல்லெறிய முயலும் பாஜகவின் நரி தந்திரம் என திமுகவினர் சாடி வருகின்றனர். தமிழிசையின் பேச்சு குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.