News September 24, 2025

BREAKING: தீபாவளி போனஸ்.. வந்தது ஹேப்பி நியூஸ்

image

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்பட்டது. அதேபோல், இந்தாண்டு தீபாவளிக்கும் போனஸ் வழங்குவது குறித்து, மோடி தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News September 24, 2025

மின்னல்கள் கூத்தாடும் ஏரி.. அதிசயமான போட்டோஸ்!

image

வெனிசுலாவின் மையத்தில் அமைந்துள்ள மரகைபோ ஏரி, அதன் தனித்துவமான சுற்றுச்சூழலால் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்தாலும், ஏரிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது மின்னல்களின் அசாதாரண நிகழ்வுதான். இங்கு மின்னல்கள் இல்லாத இரவே இல்லை. ஆண்டுக்கு சுமார் 300 இரவுகளில் இங்கு மின்னல்கள் ஏற்படுகிறது. இந்த ஏரி, “உலகின் மின்னல் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் இல்லை.

News September 24, 2025

இப்படியும் சில நல்ல உள்ளங்கள்

image

UPI உதவியால் காணாமல் செல்போன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ரிக்‌ஷாவில் பயணித்த கணவனும், மனைவியும் பணத்தை UPI-ல் செலுத்தினர். மனைவி அவரது சிம் போடாத செல்போனை ரிக்‌ஷாவில் தவறவிட, அது மீண்டும் கிடைக்காது என நினைத்தார். ரிக்‌ஷாகாரரோ UPI விவரத்தை வைத்து கணவருக்கு PLS CALL என மெசேஜ் செய்துள்ளார். பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி ததும்ப, அவரே நேரில் வந்து செல்போனை ஒப்படைத்தார். லைக் போட்டு வாழ்த்துங்க..

News September 24, 2025

BREAKING: பீலா வெங்கடேசன் காலமானார்

image

TN அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன்(56) IAS காலமானார். உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் உயிர் பிரிந்தது. தூத்துக்குடியை சேர்ந்த இவர் செங்கல்பட்டில் துணை ஆட்சியராக பணியை தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராகவும் இருந்தவர். கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!