News September 24, 2025

ராணிப்பேட்டை: தரமற்ற உணவு விற்பனையா? இதோ தீர்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுகாதாரமற்ற உணவு, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இனி இருந்த இடத்திலேயே புகார் அளிக்கலாம். தமிழக அரசின் Tn Food Safety Consumer App என்ற செயலியிலோ (அ) இந்த <>இணையத்திலோ<<>> புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். புகார் அளித்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 10, 2025

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு காவல்துறை ரோந்து

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து குழுவில் ராணிப்பேட்டை, ஆர்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலைய அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் எவ்வித அவசரத்திலும் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 9, 2025

காவலர் தேர்வு மையங்களை அதிகாரிகள் ஆய்வு

image

இன்று (நவ.09) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. தேர்வு மையங்களை காவல்துறை துணை தலைவர் Z. ஆனி விஜயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News November 9, 2025

ராணிப்பேட்டை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க!

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!