News September 24, 2025

திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் வாகனங்களில் அளவை விட அதிகமாக பொருட்களை ஏற்ற கூடாது என்று இருக்கிறது. சமீப நாட்களில் வாகன விபத்துக்கள் அதிகமாய் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்க காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் இதை பின்பற்றாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Similar News

News September 24, 2025

திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் விடியற்காலை வரை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இந்த ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.

News September 24, 2025

கோ – ஆப்டெக்ஸ் விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்

image

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட கச்சேரி தெருவில் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப் டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று (செப் 24) மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

News September 24, 2025

வே டு நியூஸ் இன் செய்தி எதிரொலியாக கம்பம் அகற்றம்

image

வாணியம்பாடி மண்டி தெரு பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த பி.எஸ்.என்.எல் தொலைபேசி கம்பம் இருந்தது. இந்தநிலையில் நேற்று வே டு நியூஸில் வெளியான செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து அந்த கம்பம் முழுமையாக அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!