News September 24, 2025
ராம்நாடு: தலையாரி முறையை மாற்றக் கோரிக்கை

கிராம நிா்வாக அலுவலருக்கு ஒரு உதவியாளா், நகா்ப்புற கிராம நிா்வாக அலுவலருக்கு 2 உதவியாளா்கள் என நியமனம் செய்தால் போதுமானது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமக் கணக்குக்கு ஒரு கிராம உதவியாளா் நியமிக்கப்படுகின்றனா். ஒரு கிராம கணக்கு விவரங்களை அறிந்து வட்டாட்சியா் உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் இந்த முறையை சரி செய்து தர கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 25, 2025
ராம்நாடு: 600 மது பாட்டில்கள் திருட்டு., 5 பேர் கைது

திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு டாஸ்மாக் கடையில் செப். 20ல் அதிகாலை பூட்டை உடைத்து 600 மது பாட்டில்கள் திருடுபோயின. ராமநாதபுரம் எஸ்பி அறிவுறுத்தல்படி, எஸ்ஐ சிவசாமி தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடினர். தீவிர தேடுதலுக்கு பின் சித்தார்கோட்டை அசோக் குமார், ராமநாதபுரம் தங்கபாண்டி, புதூர் நிஷாந்த், விருதுநகர் கே.ஆலங்குளம் முனியரசு, முத்துப்பேட்டை மோகன்ராஜ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்
News September 25, 2025
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை., கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, 2025–2026 முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர கல்வி வெளிநாடு சென்று படிக்கும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News September 25, 2025
ராம்நாடு: கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

ராமநாதபுரம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தொடங்கி வைத்தார். இங்கு நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின், மண்டல துணை மேலாளர் தீபா, விற்பனை நிலைய மேலாளர் பாண்டியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.