News September 24, 2025
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் தடை!

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்திற்குள் அரசாணை எண் 84 (G.O.MS) No.84, Environment and Forest (Ec2) Department : 25.06.2018 – ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் (பிளாஸ்டிக் சீட்டுகள், பிளோட்டுகள், டீகப்புகள், டம்ளர்கள், ஸட்ரா. கேரிபேக்ஸ்) போன்றவை கோயில் வளாகத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் மீது மொத்தமுள்ள 15 பேரூராட்சி உறுப்பினர்களில் 12 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி கடந்த 10ந்தேதி மனு அளித்தனர். அதன்படி இதற்கான வாக்கெடுப்பு வருகிற அக்.9ந்தேதி காலை 11 மணிக்கு மன்றக்கூடத்தில் நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி அறிவித்துள்ளார்.
News September 24, 2025
தென்காசி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தென்காசி மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 24, 2025
தென்காசி: சென்னை ரயில் பயணிகளுக்கு குட் நீயூஸ்

தென்காசி பாவூர்சத்திரம் கடையம் வழியாக செங்கோட்டை சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் சிறப்பு ஏசி ரயில் இயக்கப்படுகின்றன. சென்னை செங்கோட்டை சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்தும் வியாழக்கிழமை தோறும் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் இந்த வழித்தடத்தில் முதல்முறையாக அனைத்து பெட்டிகளும் முழு குளிர்சாதன வசதி பெட்டிகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.