News September 24, 2025
நாகை: போஸ்டரால் பரபரப்பு

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நரிக்குட்டை என்று அழைக்கப்படும் சந்திர புஷ்கரணி தீர்த்த குளம் தனியார் வங்கி அருகில் உள்ளது. இந்த குளத்தை சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் திருமருகல் பகுதிகளில் குளத்தை காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
வேளாண் மையங்களுக்கு ரூ.1கோடி நிதி

நாகை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்து லாபம் பெறும் வகையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் வேளாண் மதிப்பு கூட்ட மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்புவோர் நாகை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
நாகை மக்களே… வங்கியில் வேலை! APPLY NOW!

நாகை மக்களே.கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
News September 24, 2025
நாகையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், மின்வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, திட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பளம், நிரந்தர பணி உறுதி, ஓய்வூதிய திட்டம், பணிநேர சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.