News September 24, 2025
நெல்லை: தெரு நாய் பிரச்சனை – மேயர் முக்கிய தகவல்

திருநெல்வேலி மாநகரில் தெருநாய்கள் பிரச்சனையை கட்டுப்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. நாய்களை பிடித்து அறுவை சிகிச்சைக்கு பின் அதே இடத்தில் விடும் பணியும் நடக்கிறது. தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்றார்.
Similar News
News September 24, 2025
நெல்லை கவின் கொலை வழக்கில் புதிய தகவல்

நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. காதலை கைவிட கூறி சுர்ஜித் உறவினர் ஜெயபால் கவினை தனியே அழைத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. கவினை கயத்தாறு பகுதிக்கு வரவழைத்து காதலை கைவிடுமாறு மிரட்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. கவின் கொலையில் சுர்ஜித்தின் தாயாருக்கு தொடர்பு உள்ளதா என சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
News September 24, 2025
சந்திப்பு பேருந்து நிலையத்தில் திருட்டு கும்பல் கைது

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் அடிக்கடி செல்போன் பர்ஸ் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 4 பேர் பஸ் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் மணி பர்ஸ் போன்றவற்றை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த நான்கு பேரை இன்று போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 24, 2025
நெல்லை தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க கடைசி நாள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகள் 2026ம் ஆண்டிற்கான உரிமத்தை புதுப்பிக்க அக்.31 கடைசி நாள். https://dish.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றி, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். உரிம புதுப்பித்தல், திருத்தம், மாற்றம் ஆகியவை ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும். அலுவலகம் வர தேவையில்லை என நெல்லை தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்.