News September 24, 2025
அனிருத், மணிகண்டனுக்கு கலைமாமணி விருது

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத், சாண்டி மாஸ்டர், இயக்குநர் லிங்குசாமி, பாடலாசிரியர் விவேகா, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் மணிகண்டன் ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாடகர் ஜேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
தமிழக அரசில் 881 வேலைவாய்ப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 881 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 38 பாடப் பிரிவுகளில் விரிவுரையாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.8. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 24, 2025
மொரீஷியஸிலும் அன்புமணி போட்டியிடுவார்: ராமதாஸ்

பை பையாக பொய்யை வைத்துக்கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார். தாங்கள் தான் பாமக என கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுவதாக அன்புமணியை அவர் கடுமையாக சாடினார். பிஹாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும் என தெரிவித்த ராமதாஸ், தென்கொரியா, ஜப்பான், மொரீஷியஸிலும் மாம்பழ சின்னத்தில் அவர்கள் போட்டியிடவுள்ளதாக கூறினார்.
News September 24, 2025
உங்களுக்கு கருவளையம் இருக்கா? இதை செய்யலாம்

கண்களுக்குக் கீழே கருவளையங்கள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதை
நீக்க வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில இயற்கையான வழிகளை போட்டோக்களாக மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் வீட்டிலேயே செய்யக்கூடியவை உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. கருவளையம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.