News September 24, 2025

வேலூர்: 13 வயது சிறுமிக்கு காதல் தொல்லை!

image

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த சாம் திவாகர் (23), தொழிலாளி. இவர் வேலூர் நகரை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த மாதம் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சாம் திவாகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று சென்னையில் கைது செய்தனர்.

Similar News

News September 24, 2025

வேலூர்: தெரு நாய் கடித்து தொழிலாளி பரிதாப பலி

image

வேலூர் மாவட்டம், வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி(55). கட்டுமான தொழிலாளியான இவர் செப்.5ஆம் தேதி ரேசன் கடைக்கு சென்ற போது தெரு நாய் இவரை கடித்துள்ளது. சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில், ரேபிஸ் நோய் தாக்கி செப்.21ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார். தடுப்பூசி செலுத்தாமல் இருந்ததே இதற்கு காரணம். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுதுள்ளது.

News September 24, 2025

BREAKING: வேலூர்- தந்தை கண் முன் சிறுவன் கடத்தல்!

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று (செப்டம்பர் 24) தந்தை முகத்தில் மிளகாய் தூவி யோகேஷ் என்கிற எல்.கே.ஜி மாணவனை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். ஹெல்மட் அணிந்து காரில் வந்த இளைஞர் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடத்தப்பட்ட மாணவனை மீட்க தனிப்படை அமைத்து உள்ளதாக எஸ்.பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

News September 24, 2025

வேலூர்:மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

வேலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <>இணையதளத்தின் <<>>மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!