News September 24, 2025

சென்னை: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

image

சென்னை மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News September 24, 2025

JUST IN: பெருங்குடியில் பயங்கர தீ விபத்து

image

சென்னை OMR சாலை பெருங்குடியில் இருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியதால் போக்குவரத்து பாதிப்படைந்து. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீணை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 24, 2025

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

image

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில், 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குநர் சாண்டி உட்பட 90 கலைஞர்கள் விருது பெறுகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.

News September 24, 2025

வெளிப்படை தன்மை வேண்டும்-ஜெயக்குமார்

image

சென்னையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “1,200 பேரை வாக்காளர்களாக கொண்ட 1,372 வாக்குச்சாவடிகளை பிரித்துள்ளனர். குளறுபடி இல்லாமல் வாக்காளர் பட்டியலை தயாரித்து அதை வெளிப்படை தன்மையுடன் பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும். இதை சரி செய்யவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்” என கூறினார்.

error: Content is protected !!