News September 24, 2025
மக்கள் பணத்தில் தீபாவளி பரிசு கூடாது

தீபாவளிக்கு அதிகாரிகள் மற்றும் இதர துறைகளுக்கு பரிசு வழங்க அரசு பொது நிதியை பயன்படுத்த கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளது. நிதிக் கட்டுப்பாடு & அத்தியாவசியமற்ற செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அமைச்சர்கள், வங்கிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் பொருந்தும் என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
Similar News
News September 24, 2025
தமிழக அரசில் 881 வேலைவாய்ப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 881 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 38 பாடப் பிரிவுகளில் விரிவுரையாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.8. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 24, 2025
மொரீஷியஸிலும் அன்புமணி போட்டியிடுவார்: ராமதாஸ்

பை பையாக பொய்யை வைத்துக்கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார். தாங்கள் தான் பாமக என கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுவதாக அன்புமணியை அவர் கடுமையாக சாடினார். பிஹாரில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும் என தெரிவித்த ராமதாஸ், தென்கொரியா, ஜப்பான், மொரீஷியஸிலும் மாம்பழ சின்னத்தில் அவர்கள் போட்டியிடவுள்ளதாக கூறினார்.
News September 24, 2025
உங்களுக்கு கருவளையம் இருக்கா? இதை செய்யலாம்

கண்களுக்குக் கீழே கருவளையங்கள் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதை
நீக்க வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில இயற்கையான வழிகளை போட்டோக்களாக மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும் வீட்டிலேயே செய்யக்கூடியவை உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. கருவளையம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.