News September 24, 2025

ராம்நாடு: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

ராமநாதபுரம் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ்அப்-கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

Similar News

News September 25, 2025

ராம்நாடு: 600 மது பாட்டில்கள் திருட்டு., 5 பேர் கைது

image

திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு டாஸ்மாக் கடையில் செப். 20ல் அதிகாலை பூட்டை உடைத்து 600 மது பாட்டில்கள் திருடுபோயின. ராமநாதபுரம் எஸ்பி அறிவுறுத்தல்படி, எஸ்ஐ சிவசாமி தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடினர். தீவிர தேடுதலுக்கு பின் சித்தார்கோட்டை அசோக் குமார், ராமநாதபுரம் தங்கபாண்டி, புதூர் நிஷாந்த், விருதுநகர் கே.ஆலங்குளம் முனியரசு, முத்துப்பேட்டை மோகன்ராஜ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்

News September 25, 2025

மா­ணவர்­களுக்கு கல்­வி உதவித்­தொ­கை­., கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்­நா­டு அ­ரசு, 2025–2026 முஸ்லீம் சிறு­பான்­மையின மாணவ, மாணவியர்­க­ளுக்­கு உயர்­த­ர­ கல்வி வெளி­நா­டு­ சென்று­ ப­டிக்கும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்­சம் வீதம் வழங்கப்படுகிறது. பெற்­றோ­ரின் ஆண்டு­ வ­ரு­மா­னம் ரூ.8 இலட்சத்துக்கு மி­கா­மல் இருத்­தல் வேண்­டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

News September 25, 2025

ராம்நாடு: கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

image

ராமநாதபுரம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தொடங்கி வைத்தார். இங்கு நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின், மண்டல துணை மேலாளர் தீபா, விற்பனை நிலைய மேலாளர் பாண்டியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!