News September 24, 2025
ராணிப்பேட்டை – ஒரு பார்வை

ராணிப்பேட்டை, தமிழகத்தின் 36வது மாவட்டமாக 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திராவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.
Similar News
News September 24, 2025
ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி உறவினர்கள் மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுவன் கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் தாமரைப்பாக்கம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
News September 24, 2025
ராணிப்பேட்டை: வரதட்சனையால் பெண் தற்கொலை?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், தண்டலத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி நிவேதா. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நிவேதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நிவேதாவை வரதட்சனை கேட்டு வினோத் கொடுமை செய்ததாகவும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி நிவேதா உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டதில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News September 24, 2025
ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி! அதிர்ச்சி சம்பவம்

ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைபாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மிதுன். காவனூர் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று மதியம் பள்ளியில் மதிய இடைவேளையின் போது கேக் சாப்பிட்டுள்ளார். அதன்பின் திடீரென சிறுவன் முகம் வீங்கி மயக்கமடைந்தார். சிறுவனை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.