News September 24, 2025

காஞ்சிபுரம்: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 24, 2025

காஞ்சிபுரம்: குட்கா விற்பனை – இருவர் கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் அடுத்த மாத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் நடத்திய சோதனையில், சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரான அசாம் மாநிலத்தைச் அச்சத் உத் ஜமான் (35), அஜிபுர் இஸ்லாம் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

News September 24, 2025

காஞ்சிபுரம் தேர்வர்கள் கவனத்திற்கு!

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செப்.28 நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும். 9-க்கு பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதியில்லை. செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்காக சிறப்புப் பேருந்துகள் காலை 6 மணி முதல் இயக்கப்படும்

News September 24, 2025

காஞ்சிபுரம் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

காஞ்சிபுரம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!