News September 24, 2025
நாகை: மாடு குறுக்கே வந்ததால் விபத்து!

காடம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவர் நேற்று நாகூருக்கு சொந்த வேலை காரணமாக சென்று விட்டு நாகைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது நாகூர் நாகை சாலையில் திடீரென்று சாலையின் நடுவே மாடு குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது
Similar News
News September 24, 2025
நாகை மக்களே… வங்கியில் வேலை! APPLY NOW!

நாகை மக்களே.கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
News September 24, 2025
நாகையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், மின்வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, திட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பளம், நிரந்தர பணி உறுதி, ஓய்வூதிய திட்டம், பணிநேர சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
News September 24, 2025
நாகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 21 மற்றும் 22 ஆகிய வார்டு பகுதிகளுக்கான முகாம் நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு தேவர் சமுதாய கூடத்தில் நாளை 25ஆம் தேதி காலை நடைபெறுகிறது என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.